கெபிமா, மஸ்ஜிட் இந்தியா முஸ்லீம் கோலாலம்பூர், ஜாக்கிம் ஆகியவற்றின் இணையில் வரும் அக்டோபர் 11ஆம் தேதி Dewan Syeikh Daud Al- Fathoni என்ற இடத்தில் மலேசியாவின் முதல் மதராஸா, சூராவ், பள்ளிவாசல் ஆகியவற்றின் துணையோடு முதல் இந்திய முஸ்லீம் மாநாடு நடைபெறவுள்ளது.
2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செக்ரியட்டல் அல் எவால் குழு அமைக்கப்பட்டது. இதில் அனைத்து மதராஸா, பள்ளிவாசல், சூராவ் ஆகிய தலைவர்களுடன் கலந்துரையாடி இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 8 விவகாரங்கள் எழுப்பபட்டு அதனை 5ஆக சுருக்கி மாநாட்டின் போது பிரதமர்துறையின் சமய இலாகா அமைச்சர் செனட்டர் டத்தோ செத்தியா டாக்டர் ஹாஜி முகமட் நயிம் பின் ஹாஜி மொக்தாரிடம் வழங்கப்படும் என்று கெபிமாவின் ஆலோசகர் முகமட் பின் காதிர் அலி தெரிவித்தார்.
காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மதராஸா, சூராவ், பள்ளிவாசலை சேர்ந்த அனைவரும் திரளாக வருகை புரிந்து நமது கோரிக்கைகளுக்கு வலு பெற செய்ய வேண்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மாநாடு தொடர்பாக இன்று சைட் பிரிஸ்டோவில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதன் உரிமையாளர் டத்தோ ஹாஜி ஜப்ருல்கான் இடம், சிற்றுண்டி ஆகியவற்றை வழங்கினார். அவருக்கு இவ்வேளையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.









