பட்டர்வொர்த்:
சுங்கை லோகன், ஜாலான் பெர்மாதாங் பாரு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்துக்குப் பின் கார் தீப்பிடித்ததில் இருவர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் முழுவதுமாக எரிந்த காரில், கருகிய நிலையில் இரண்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதுவரை பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை என்று, பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் முகமட் ஷோகி ஹம்சா தெரிவித்தார்.
காலை 7.09 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு இயந்திரத்துடன் ஏழு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
“புரோட்டான் சாகா BLM மாடல் காரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டது, அது சுமார் 80 சதவீதம் எரிந்திருந்தது. ஆரம்ப தகவல்களின் அடிப்படையில் இது சாலை விபத்தால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கெப்பாளா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என்றார் அவர்.




















