பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதற்கு இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும், – இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

காசாவில் அல்-அஹ்லி அல்-அரபி மருத்துவமனை மீது குண்டுவீசி 500-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றதைத் தொடர்ந்து, இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பதில் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

உலக வரலாற்றில் கறையாக படியும் ஒரு மோசமான சோகத்தைத் தடுக்க, இனவெறி ஆட்சியின் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக முழு உலகமும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த கொடுமையான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வர நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here