குவாந்தான்:
பஹாங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான தெங்கு அம்புவான் ஆப்சான் மருத்துவமனையில் (HTAA) இன்று மாலை பெய்த கனமழையின்போது மழைநீர் கூரையிலிருந்து கசிய, மருத்துவமனை தரைபகுதி ஒரு சிறிய “நீர்ச்சல் குளம்” போல் மாறியது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த 20 விநாடி வீடியோவில் மின் விளக்குகளின் அருகே கூரையிலிருந்து தாரையாக நீர் சொட்டும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், தரைபகுதி முழுவதும் நீர் தேங்கியிருந்தது.
மழைநீர் கசிவு இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் மருத்துவமனை தரை தளத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்டது. இதனால் நோயாளர் வார்டுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் அதிர்ச்சியாக இருந்தாலும், நோயாளிகள் அமைதியாக தங்கள் முறை வரும்வரை காத்திருந்தனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். “கூரை தாங்காமல் இடிந்து விழும் அபாயம் உள்ளது” என சிலர் எச்சரித்துள்ளனர். மேலும், நீர் கசிவு மருத்துவமனையின் மின்சார அமைப்புக்கு அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.





















