சென்னை:
எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு ‘அரசன்’ எனத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியவுடன் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும், படத்தின் கதாநாயகி குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படாததால் சிறிது ஏமாற்றம் நிலவியது.
இந்நிலையில், படத்தில் சமந்தா நாயகியாக நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை என்றாலும், சமந்தாவின் முழு கால்ஷீட்டும் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதாகவும், அவருக்கு மிக உயர்ந்த சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சிம்பு, மணிரத்னம் இயக்கப் போகும் படத்தில் நடிப்பார் என்ற செய்திகள் வெளிவந்தன. ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. அதன்பின், அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை-2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து, தனுஷ் கதாநாயகனாக நடிப்பார் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், தாணு தயாரிப்பில் ‘அரசன்’ அறிவிப்பு வெளியாகி, அவர்களை மீண்டும் உற்சாகப்படுத்தியுள்ளது.



















