கோலாலம்பூர்- சிரம்பான் விரைவுச்சாலையின் Km301.2 இல் இன்று காலை ஒரு கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 16 வயதுடைய ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறுகையில், நான்கு பேருடன் அதிகாலை 1.45 மணியளவில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது.
23 வயது ஆண் ஓட்டுநரும் டீனேஜரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அவர் கூறினார். இரண்டு பயணிகள் – 20 வயதுடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் – கால்கள் மற்றும் கைகளில் காயமடைந்தனர். மேலும் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
அலட்சியமாகவோ அல்லது ஆபத்தான முறையில் வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக நாஸ்ரோன் கூறினார்.








