வெட்கக்கேடு!.. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை புகழ்ந்த மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசா அமைதி திட்டத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுள்ள நிலையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பாராட்டி பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “இது பிரதமர் நேதன்யாகுவின் வலுவான தலைமையின் பிரதிபலிப்பாகும்” என்று மோடி குறிப்பிட்டார்.இந்நிலையில் இதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில்,” காசாவில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று,

இதையும் படியுங்கள்: இருமல் மருந்து விவகாரம்: தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என ம.பி முதல்வர் குற்றச்சாட்டு காசா தொடர்பான புதிய முன்னேற்றங்களை பிரதமர் வரவேற்று அதிபர் டிரம்பைப் பாராட்டியுள்ளார். அவ்வாறு செய்ய பிரதமர் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமல்ல.

ஆனால், கடந்த இருபது மாதங்களாக காசாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்ட இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவுக்கு மோடி அளித்துள்ள தகுதியற்ற பாராட்டு அதிர்ச்சியளிப்பதும் வெட்கக்கேடானதும் ஆகும். மேலும் தார்மீக ரீதியாக கொடூரமான ஒரு விஷயம்.

1988 நவம்பரில் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட, இப்போது 150க்கும் மேற்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, சுதந்திரமான, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசின் எதிர்காலம் குறித்தும் மோடி முழுமையான மௌனம் காத்து வருகிறார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்ந்து விரிவடைவது குறித்தும் மோடி எதுவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here