கோலாலம்பூர்:
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சிதிலமடைந்த பள்ளிகளை (Dilapidated Schools) மேம்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RM2 பில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளார்.
இந்த ஒதுக்கீட்டில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.
சுமார் 520 பள்ளிகள் பழுது பார்க்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் சீரமைக்கப்படும்.
கழிப்பறைகள், சிற்றுண்டிச் சாலைகள், தொழுகைப் பகுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்கனவே சீரமைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும், வளரும் சமூகங்களின் தேவைக்கிணங்க 38 புதிய பள்ளிகள் கட்டப்படும்.
இந்த நடவடிக்கை, அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் தரமான கல்வி உள்கட்டமைப்பை வழங்குவதில் மாடானி அரசாங்கத்தின் தீவிர அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.




















