வரவுசெலவு திட்டம் 2026: பொது மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மேம்பாட்டிற்கு RM1.2 பில்லியன் ஒதுக்கீடு

கோலாலம்பூர்:

மலேசிய மக்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தரமான மருத்துவ சேவைகளை உறுதி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அரசு RM1.2 பில்லியன் ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும், கிளினிக்குகளும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், மாவட்ட மருத்துவமனைகளின் வார்டுகளை மேம்படுத்த RM100 மில்லியன், அதேபோல் மிகவும் பழைய மருத்துவ உபகரணங்களை மாற்றுதல் மற்றும் புதிய மருத்துவத் துறைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டுவர RM755 மில்லியன் முதலீடு செய்யப்படும்.

இது, மலேசியாவின் சுகாதார அமைப்பை நவீனமயமாக்குவதற்கான அரசாங்கத்தின் வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here