எஸ்பிஎம் தேர்வு எழுதவிருந்த மாணவி வீட்டில் இறந்து கிடந்த சம்பவம்

நெகிரி செம்பிலான் கோல கிளாவாங்கில் சனிக்கிழமை 17 வயதான 5 ஆம் வகுப்பு மாணவி இறந்து கிடந்தார். கோல கிளாவாங் காவல் நிலையத்திற்கு ஜெலுபு மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடமிருந்து SPM மாணவி குறித்து இரவு 11.50 மணிக்கு அழைப்பு வந்ததாக மாநில காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி, அவரது குடும்பத்தின்  மாடி வீட்டின் முதல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் அறையை உள்ளே இருந்து பூட்டியிருந்தார் என்று சினார் ஹரியன் கூறியதாக அவர் தெரிவித்தார். உடலை பரிசோதித்ததில் தற்காப்பு காயங்கள் அல்லது அத்துமீறல் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அல்சாஃப்னி கூறினார். அவரது தனிப்பட்ட உடைமைகளும் தீண்டப்படாமல் இருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here