மலேசியா-சீனா கூட்டு இராணுவப் பயிற்சி; இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்கின்றது மலேசிய ஆயுதப் படை

கோலாலம்பூர்:

சிலாங்கூரில் உள்ள பல பகுதிகளில் வெளிநாட்டு இராணுவ வீரர்கள், படைவீரர்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகள் நடப்பதைக் கண்டு பொதுமக்கள் பீதியடையவோ அல்லது அச்சப்படவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மலேசிய ஆயுதப் படைகளுக்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (PLA) இடையிலான இருதரப்புப் பயிற்சியான அமான் யூயி 2025 பயிற்சியின் ஒரு பகுதியாக இது இருப்பதாக ஆயுதப் படைகளின் கூட்டுப் படைத் தலைமையகம் (JFHQ) தெரிவித்துள்ளது.

கிள்ளான், சுபாங், பூச்சோங் மற்றும் மலாக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இந்த பயிற்சி, வரும் புதன்கிழமை (அக்டோபர் 15) முதல் அடுத்த வியாழக்கிழமை (அக்டோபர் 23) வரை நடைபெறும்.

“பொதுமக்கள், குறிப்பாக இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள், பயிற்சி முடியும் வரை வெளிநாட்டு ராணுவ வீரர்கள், வாகனங்கள் மற்றும் வாகனத் தொடரணிகளின் நடமாட்டம் அல்லது நடைபெறும் எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளையும் கண்டு பீதியடையவோ அல்லது பதட்டமடையவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here