கோலாலம்பூர்:
ஜப்பானின் புதிய பிரதமராக லிபரல் ஜனநாயக் கட்சியின் தலைவர் சனே டகாய்ச்சி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் இணைந்து பணியாற்றவும் உறவை வலுப்படுத்துவதற்கும்PKR உறுதிபூண்டுள்ளது.
PKR -ன் அனைத்துலக பணியகம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து தகைச்சியின் நியமனத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது, இது ஜப்பானின் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்று கட்சி விவரித்தது.
64 வயதான சனே டகாய்ச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
“நமது நாடுகளுக்கு இடையே பரஸ்பர புரிதல், முற்போக்கான மதிப்புகள் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் உணர்வில் எல்டிபியுடன் ஒத்துழைப்பை நிறுவுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பிகேஆர் எதிர்நோக்குகிறது” என்றுPKR -இந்த அனைத்துலக விவகார தலைவர் டாக்டர் மஸ்லி மாலிக் கூறினார்.




















