ஷா ஆலமில் போலீஸ் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டுநர் காயம்

ஷா ஆலம்:

ஷா ஆலம், பாடாங் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சந்திப்பில், பிரிவு 16 நோக்கிச் சென்ற போலீஸ் ரோந்து கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார்.

நேற்று மாலை 6.19 மணிக்கு நடந்த சம்பவத்தில், அவசர அழைப்பிற்கு பதிலளிக்க போலீஸ் ரோந்து கார் ஜாலான் சுங்கை ரசாவிலிருந்து பிரிவு 19 க்கு சென்று கொண்டிருந்தது, அப்போது “ஜாலான் பாடாங் ஜாவா திசையிலிருந்து 27 வயது நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாக, மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

போலீஸ் ​ரோந்து காரின் பீக்கன் லைட் மற்றும் சைரன் செயல்பட்டன என்றும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் கைகளில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன என்றும், ஷா ஆலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

ரோந்து காரில் இருந்த காவல்துறையினருக்கு பலத்த காயம் ஏற்படவில்லை, எனினும் அவர்களுக்கும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 43(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. காவல்துறையினரின் அலட்சியம் உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணை ஆணையக் குழுவின் உள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் ஷா ஆலம் போக்குவரத்து அமலாக்கம் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜஹாரிசுல் ஜம்ரியை 019-322 9097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here