மலாக்காவில் ஆதிகாலத்து மலாய் கப்பல் சிதைவுகள் கண்டெடுப்பு

மலாக்கா:
ஆதிகாலத்து மலாய் கப்பல் ஒன்றின் சிதைவுகள், மலாக்கா மாநிலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு தீவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது, அண்மைய ஆண்டுகளில் மலாக்காவில் நிகழ்ந்த மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ தெரிவித்துள்ளார்.

மரத்தால் செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் கப்பல் சுமார் 50 முதல் 70 மீட்டர் நீளமுடையது என்றும், மலாக்காவின் வரலாற்று பெருமையை வெளிப்படுத்தும் முக்கிய சான்றாக இது விளங்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த அரிய கண்டுபிடிப்பு பாதுகாப்பாக பராமரிக்கப்படும். ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, இது மலாக்காவின் ஒரு முக்கிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்,”
என்று அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 30) தெரிவித்தார்.

இந்தக் கண்டுபிடிப்பு, மலாக்காவின் வரலாற்று பெருமையையும் கலாசார மரபையும் உலகளவில் எடுத்துக்காட்டுவதோடு, புதிய கலாசார சுற்றுலாத் தளமாக உருவாக்கும் வாய்ப்பையும் அளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

“மரபு, வரலாறு மற்றும் நாகரிக வளர்ச்சி ஆகியவற்றைக் கூறும் உலகப் புகழ் பெற்ற மாநிலம் என்ற மலாக்காவின் அடையாளத்திற்கு இது மேலும் மெருகூட்டும்,”என்று அவர் பெருமையுடன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here