கோலாலம்பூர்:
நேற்று, முத்தியாரா கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் 3 அருகே பாறைகள் சரிந்து விழுந்ததிற்கு கு 15 ஆண்டுகள் பழமையான பாறை வலை அமைப்பின் தேய்மானமே காரணம் என்று அம்பாங்க் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) கண்டறிந்துள்ளது.
அந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், பாறை சரிவு மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

“பாறையால் மூடப்பட்ட சாய்வுப் பகுதியில் 2010 ஆம் ஆண்டு வாக்கில் கம்பி வலை அமைப்பு நிறுவப்பட்டது.
“பாறை விழுந்த சம்பவத்தின் விளைவாக கம்பி வலை அமைப்பில் சேதம் மற்றும் கிழிவுகள் அடையாளம் காணப்பட்டன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, MPAJ உடனடியாக பாதுகாப்பு கயிறுகளை நிறுவி, பாறை வீழ்ச்சியை அதே நாளிலேயே சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது, சுத்தம் செய்யும் பணி இன்றும் தொடரும்” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் நடந்த இந்த சம்பவத்தில் மொத்தம் ஆறு கார்கள் சேதமடைந்தன அவற்றில் ஐந்து கார்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. அதில் ஒரு பெரோடுவா கன்சில் கார் முற்றிலுமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது..
இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















