RM11.4 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் — 55 வயது ஆடவர் கைது

ஜோகூர்:

வீட்டில் பெருமளவு போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 55 வயது உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைவர் டத்தோக் ரஹ்மான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

பெட்டிகளை லாரியிலிருந்து இறக்கியதாக இஸ்கந்தார் புத்ரி, தாமான் புகிட் இந்தா பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையின் போது, 25 கிலோ எக்ஸ்டஸி (Ecstasy), 23 கிலோ சாபு (Syabu), 22 கிலோ மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine), 13 கிலோ கெட்டமின் (Ketamine), மற்றும் 19 கிலோ எரிமின் (Erimin) உள்ளிட்ட மொத்தம் 115 கிலோ எடையுள்ள பல்வேறு வகை போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.

மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் Toyota Vios கார் மற்றும் RM10,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு சுமார் RM11.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 55 வயது ஆடவர் தற்போது ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு மேலதிகமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here