கோலாலம்பூர் :
இன்று அதிகாலை மேடான் துவாங்கு மற்றும் சௌக்கிட் நிலையங்களுக்கு இடையே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக KL மோனோரயில் ரயில் நின்றதால் பயணிகளுக்கு தாமதம் ஏற்பட்டது.
“காலை 8:50 மணிக்கு அறிவிக்கப்பட்ட இந்த சம்பவத்தில், 25 எண் கொண்ட ரயில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக மேடான் துவாங்கு மற்றும் தித்திவாங்சா நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டது.
அவ்வேளையில் “ரயிலுக்குள் ஒரு பயணி மயக்கமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திலிருந்து குறித்த தனிநபரை வெளியேற்ற உதவியது” என்றும், “பயணியை குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களும் ஆரம்ப சிகிச்சை அளித்தனர்,” என்று ரேபிட் ரெயில் எஸ்டிஎன் பெர்ஹாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















