பராசக்தி படத்தின் 2வது பாடலான ‘ரத்னமாலா’ வெளியானது

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் ‘பராசக்தி’. ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.

இதனிடையே, சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here