எனது சேவை காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தியிருக்கிறேன் – நிவாஸ் ராகவன்

­எனது 4 ஆண்டு தலைமையில் என்னால் முடிந்தளவிற்கு கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளத்தில் (KLSICCI) மேம்பாடுகளைக் கொண்டு வந்திருப்பதாகவும் மேலும் எனது சேவை காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கிறேன் என்று தீப வண்ணங்கள் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது சமேளத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

எங்கள் சம்மேளத்தின் சட்டத் திட்டங்களுக்கு இணங்க அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்றும் அது வரை எனது களபணி தொடரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக சிறு-குறு- நடுத்தர வர்த்தகர்களின் வியாபார வளர்ச்சிக்கு அரசாங்கத்துடன் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக சொன்னார்.

உறுப்பினர்கள், சம்மேளத்தின் முன்னாள் தலைவர்கள், தூதரக பிரதிநிதிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பிற்கு நிதி அமைச்சும், இலக்கியவியல் அமைச்சும் ஆதரவு வழங்கியதாக நிவாஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சுபாங் சட்டமன்ற் உறுப்பினர் Michelle Ng தமதுரையில் ஒற்றுமையே உயர்வை தரும் என்றும் கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளத்தின்  தீபாவளி உபசரிப்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். 100 ஆண்டுகளுக்கு பழைமை வாய்ந்த இந்த சம்மேளம் இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கு பேராதரவு வழங்கி வருவது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here