ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் மோதியதில் விமானி மரணம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில், ஒரு விமானி உயிரிழந்தார். விமானங்களில் ஒன்றின் சிதிலங்கள் தரையில் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிட்னியின் தென்மேற்கில் உள்ள வெடர்பர்ன் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள புதர்ப்பகுதியில், அந்த விமானியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசர சேவைப் பிரிவினரும் அந்த விமானத்தை கண்டுபிடித்தனர்; இதில் விமானி ஒருவரே இருந்ததாக நம்பப்படுகிறது.

மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதன் விமானி காயமின்றி உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இரண்டும் இரண்டு இருக்கைகள் கொண்ட ‘வான் RV-7’ வகை விமானங்களாகும். இந்த வான்வழி மோதல் குறித்து ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் புலனாய்வு தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here