கோத்தா பாருவிலுள்ள மாளிகைக் கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு:

கோத்தா பாருவிலுள்ள ஒரு மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் ஒருவருக்கு எதிராக நேற்று கோத்தா பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

44 வயது முகமட் இர்ஃபான் அஸியாடி அப்துல் அஸிஸ் என்ற அந்த போலீஸ்காரர், மளிகைக்கடை உதவியாளரான பாகிஸ்தான் நாட்டவரை மடக்கி 400 ரிங்கிட்டை கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த போலீஸ்காரர், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி மாலை 6.20 மணியளவில் பெங்காலான் செப்பா, கம்போங் பெரிஸ் ஜம்புவில் உள்ள மளிகைக்கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.

இதே போன்று கடந்த நவம்பர் 10 ஆம் தேதி குறித்த போலீஸ்காரர், மற்றொரு மளிகைக்கடையில் நுழைந்து பாகிஸ்தான் ஆடவரைப் பொருட்களைக் கொள்ளையிட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனாலும் குறித்த போலீஸ்காரர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறுத்தது விசாரணை கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here