பிடிபிடிஎன் கடன்தாரர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைக்க நிலையான கல்வி இயக்கம் உதவுகிறது

கோலாலம்பூர், 

தேசிய உயர் கல்வி நிதியகம் (பிடிபிடிஎன்) நிலைத்த கல்வி இயக்கம் எனப்படும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் நட்பு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. கடன்தாரர்கள் தங்களின் கல்விக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் உதவுவதும் எளிதாக்குவதும் இதன் நோக்கமாகும்.

பிடிபிஎன்னில் நிலுவைக் கடன்களைக் கொண்டிருப்போருக்கு, அவர்களின் நிதி திறனைப் பொருத்த வகையில் கடன்களை மறுசீரமைக்கும் வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்குகிறது. இந்த நிலைத்த கல்வி இயக்கம் 500 ரிங்கிட் அல்லது அதற்கும் மேற்பட்ட நிலுவைக் கடன்களைக் கொண்ட அனைத்து பாரம்பரிய, உஜ்ரா பிடிபிடிஎன் கடனாளர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்த இயக்கம் 2025 அக்டோபர் 15 முதல் 2025 டிசம்பர் 15 வரை செயற்படும். இந்த இயக்கத்தின் மூலம் கடனாளர்கள் தங்களின் நிலுவைக் கடன் தொகையின் 20% அல்லது குறைந்தது 500 ரிங்கிட் அடிப்படையில் எது அதிகமோ, அதனை முன்பணமாகச் செலுத்தி, மை பிடிபிடிஎன் அகப்பக்கத்தின் மூலம் திருப்பிச் செலுத்தும் முறைக்கான ஆலோசனைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆலோசனையின் மூலம், கடனாளர்கள் தங்களின் கடன்களை மறுசீரமைக்க, உஜ்ரா முறைக்கு மாற்றம் செய்ய அல்லது பல கடன்களை ஒருங்கிணைக்கலாம். இவை அனைத்தும் இந்த குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் செய்யப்பட வேண்டும்.

இந்த முறையின் மூலம், தங்களின் கடன் செலுத்தும் அட்டவணையை தங்களின் நிதி ஆற்றலுக்கு ஏற்ற வகையில் மறுசீரமைக்கும் வாய்ப்பைக் கடனாளர்கள் பெறுகின்றனர்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை சீராக நடைபெறுவதற்காக, கடனாளர்கள் தங்களின் கடன்களைச் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுதல், நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்துக் கொள்ளுதல், நிதி ஆற்றலுக்குத் தகுந்த வகையில் கட்டணத் தொகையை மாற்றிக் கொள்ளும் முறைகள் மூலம் தவணையாகச் செலுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இதன் மூலம், அவர்கள் தங்களின் நிதி ஆற்றலுக்கு ஏற்ற வகையில் கடன்களை மறுசீரமைக்கும் ஊக்கத்தொகையையும் பெற முடியும்.

“மேலும், பிடிபிடிஎன் கடன்தாரர்கள் தங்களின் விவகாரங்களை எளிதாக்குவதற்கும் பிடிபிடிஎன் உதவத் தயார் என்ற முன்முயற்சியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயலாக்கம் மிக்க சீரிய அணுகுமுறை ஆகும், மேலும் இது துரிதமான, எளிதான பாதுகாப்பான பல்வேறு சேவை வழிமுறைகளை வழங்குகிறது.

பிடிபிடிஎன் கடனாளர்கள் செயற்படுத்தத் தக்க வழிமுறைகள்
பிடிபிடிஎன் கேர்லைன் : 03 – 2193 3000 (திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்)  நேரடி உரையாடல் (Live Chat) : PTPTN இணையத் தளமான www.ptptn.gov.my இல் E-Aduan PTPTN : https://eaduan.ptptn.gov.my PTPTN விற்பனை நிர்வாக அதிகாரிகள் (Eksekutif Jualan PTPTN) : https:// www.ptptn.gov.my/hubungi-ptptn தேசிய உயர் கல்வி நிதியகத்தின் (பிடிபிடிஎன்) அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சேவையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, 2025 நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை பிடிபிடிஎன் வாடிக்கையாளர் நட்பு மாதம் மாநில பிடிபிடிஎன் அலுவலகங்கள், கிளைகளில் ஒரே நேரத்தில் நடைபெறும்.

தேசிய உயர் கல்வி நிதியகத்தின் (பிடிபிடிஎன்) அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 500 ரிங்கிட், அதற்கு மேற்பட்ட கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு வழங்கப்படும். மொத்தமாக 70,000 ரிங்கிட் பெறுமான ரொக்கப் பரிசுகள் 140 வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். இந்த பரிசுத் திட்டம் 2025 நவம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை வழங்கப்படும்.

மாநில, கிளை அலுவலகங்களில் முதலில் வரும் 20 வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆலோசனை பெற்றுக் கொண்டால், சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்படும்.

மேலும், கடனாளர்களுக்கு சேவையை எளிதாக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில கிளை அலுவலகங்களின் முகப்பிடச் சேவை நேரங்கள் 2025 டிசம்பர் 1 முதல் 15 வரை வழக்கத்தை விட கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

செயல்பாட்டு நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
சனிக்கிழமைகளில்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here