லஞ்சம் கொடுப்பவர்களைப் பெருமைப்படுத்தும்ப் போக்கு ஆபத்தானது: பிரதமர் அன்வார் கவலை!

கோலாலம்பூர், டிசம்பர் 8 –

லஞ்சம் கொடுப்பவர்களைப் பெருமைப்படுத்தும் சில தரப்பினரின் கவலையளிக்கும்ப் போக்கு குறித்துப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கலாச்சாரம், ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கும் மற்றும் பொது நிறுவனங்களில் ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துவதாக அவர் கோலாலம்பூரில் பேசும்போது வலியுறுத்தினார்.

தேசிய ஊழல் தடுப்பு உத்தி 2024-2028இன் கீழ்ச் சட்ட அமலாக்க ஏஜென்சிகள் உறுதியுடன் முன்னேறி வந்தாலும், ஊழல் நிறைந்தவர்கள் பொதுமக்களின்க் கருத்தை வடிவமைக்கவும், சட்ட அமலாக்கத்தைக் குற்றவாளியாகவோ அல்லது வில்லனாகவோ சித்தரிக்கவும் முயற்சிப்பது, அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, பொது நிதியைக் கொள்ளையடிப்பவர்களை ஆதரிக்கும் அல்லது கொண்டாடும் கதைகளை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here