ஜோகூர் பாரு:
இன்று பிற்பகல் திடீர் வெள்ளத்தில் சிக்கிய குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து மீட்கப்பட்ட 34 பேரில் பதினெட்டு குழந்தைகள் மற்றும் 10 சிறுவர்கள் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
காம்போங் முகமட் அமீனில் உள்ள பாலர் பள்ளி மற்றும் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து மாலை 4.30 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு சிறுவர்களுடன் ஐந்து ஆசிரியர்களும் ஒரு சமையல்காரரும் வெள்ளத்திற்குள் சிக்கியிருப்பதை இருப்பதைக் கண்டனர்.
அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு படகுகள் மூலம் பள்ளியை விட்டு, பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர் என்று அறியப்படுகிறது.

























