“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடியவர் வள்ளலார். வள்ளலார் என அனைவராலும் அழைக்கப்படும் இவரது பெயர் இராமலிங்க அடிகளார். இவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. நல்ல, ஞான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பியவர்.
இவர், மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள் என்னென்ன என்று கூறியுள்ளார்…

1.நல்லதோர் மனதை நடுங்க செய்வது பாவம்.
2.தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்.
3.நட்பிற்கு வஞ்சகம் இழைப்பது பாவம்.
4.பசித்தோருக்கு அன்னமிடாதிருப்பது பாவம்.
5.கோள் சொல்லிக் குடும்பத்தை கெடுப்பது பாவம்.
6.வலிய வழங்கிவிட்டு மானம் கெடுப்பது பாவம்.
7.குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
8.ஊன் உண்டு உடலை வளர்ப்பது பாவம்.
9.உணவுப் பொருட்களிலும், மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது பாவம். 10.எச்சில் உணவையும், கெட்டுப்போன உணவையும் பிறருக்கு தருவது பாவம்.





















