தேசிய கல்வி முறையை வலுப்படுத்த RPN 2026-2035 திட்டத்தை பிரதமர் அன்வார் தொடங்கி வைக்கிறார்

கோலாலம்பூர்:

லேசியாவின் தேசியக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக, 2026 முதல் 2035 வரையிலான பத்து ஆண்டு காலத்திற்கான தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டத்தை (RPN 2026-2035) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கவுள்ளார்.

கல்வி அமைச்சு (MOE) மற்றும் உயர்க்கல்வி அமைச்சு (MOHE) இணைந்து உருவாக்கியுள்ள இந்த வரைவுத் திட்டம், பள்ளிக்கல்வி முதல் உயர்க்கல்வி வரை உள்ளடக்கிய ஒரு முழுமையான கல்விச் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் மனிதநேயப் பண்புகள் (Karamah Insaniah) கொண்ட மாணவர்களை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

‘மடானி’ அரசாங்கத்தின் கல்வி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமமானக் கல்வியை வழங்குவதன் மூலம் மலேசியாவை இப்பிராந்தியத்தின் சிறந்த கல்வி மையமாக மாற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here