பிரதமர் அன்வார் இப்ராகிம் உடல்நலப் பரிசோதனை: “நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்” – மருத்துவமனை அறிக்கை!

கோலாலம்பூர்:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று (ஜனவரி 18, 2026) செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் (HSIS) தனது வழக்கமான உடல்நலப் பரிசோதனையை மேற்கொண்டார்.

இந்தப் பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பாரிக் ரிசால் அப்துல் ஹமிட் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “பரிசோதனை முடிவுகள் பிரதமர் மிகச்சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன.அவர் தனது அதிகாரப்பூர்வப் பணிகளைத் திட்டமிட்டபடி தடையின்றித் தொடர முழுத் தகுதியுடன் உள்ளார்,” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்தப் பரிசோதனை, அவர் நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தவும், மக்களுக்குத் தனது கடமைகளை முழு அர்ப்பணிப்புடன் ஆற்றவும் கொண்டுள்ள உடல் தகுதி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் மீதான அக்கறையைப் பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டும் இதே மருத்துவமனையில் அவர் தனது வருடாந்தரப் பரிசோதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை (ஜனவரி 19) நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாகப் பிரதமர் மன்னரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here