கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான பேருந்து பயணத்தை எளிதாக்க புதிய போக்குவரத்து மையம்

கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான பேருந்து பயணத்தை எளிதாக்கும் வகையில், புக்கிட் பிந்தாங் சிட்டி சென்டரில் உள்ள LaLaport வணிக வளாகத்தில் புதிய போக்குவரத்து மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் இன்று பார்வையிட்டதோடு ​இந்த மையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பேசினார்.

​இங்கு 11 பேருந்து நிறுத்தங்கள், நவீன காத்திருப்பு அறை மற்றும் மின்னணு டிக்கெட் போன்ற ஒருங்கிணைந்த வசதிகள் உள்ளன. முன்னதாக கோரஸ் ஹோட்டல் மற்றும் பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் போன்ற இடங்களில் பேருந்துகள் நின்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை இது குறைக்கும் என அவர் குறிப்பிட்டார். ​அத்துடன் Hang Tuah எல்ஆர்டி மற்றும் மோனோரெயில் நிலையங்களுடன் இது நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மையத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க முடியும் என தெரிவித்த அந்தோனி லோக், எதிர்காலத்தில் இது போன்ற போக்குவரத்து மையங்களை சன்வே பிரமிட் மற்றும் வான் உத்தாமா போன்ற வணிக வளாகங்களிலும் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

செய்தி: ராமேஸ்வரி ராஜா
படங்கள்: எஸ். சண்முகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here