சீனப்புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி; கவலையின்றி ஊர் திரும்பலாம்! Batik Air-இல் ஒரு வழிப்பயணம் 318 ரிங்கிட் முதல்!

கோலாலம்பூர்:

சீனப் புத்தாண்டு காலங்களில் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக உயர்வதைத் தடுக்கும் வகையில், பயணிகளின் வசதிக்காக ‘நிலையான கட்டண’ (Fixed Fares) திட்டத்தை Batik Air விமான நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

‘Fixed Fares for Your Reunion’ எனும் இந்த விசேஷ பிரச்சாரத்தின் மூலம், பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணங்கள் திடீரென உயர்வதைத் தடுத்து, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்ட விலையில் பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திடடத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

பண்டிகை நாட்களில் திடீரெனக் கட்டணங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க, கிழக்கு மலேசியாவிற்குச் செல்லும் பயணிகளுக்குப் பின்வரும் சலுகை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன: இதில் கோலாலம்பூர் அல்லது சுபாங்கிலிருந்து கூச்சிங் (Kuching) செல்ல (ஒரு வழிப்பயணம்) 318 ரிங்கிட் முதல் கட்டணங்கள் அறவிடப்படுகிறது.

அதேபோல கோலாலம்பூர் அல்லது சுபாங்கிலிருந்து கோத்தா கினபாலு (Kota Kinabalu) செல்ல (ஒரு வழிப்பயணம்) 378 ரிங்கிட் முதல் கட்டணங்கள் அறவிடப்படுகிறது.

இந்தப் பயணங்களுக்கான முன்பதிவு காலம் இன்று முதல் பிப்ரவரி 13, 2026 வரை இருக்கும் என்றும், பயணிகள் வரும் பிப்ரவரி 13 முதல் 16 வரை இப்பயணங்களை மேற்கொள்ளலாம்.

விழாக்காலங்களில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் நிலையைத் தடுத்து, சாதாரண மக்களும் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். மேலும், பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு ஜோகூர் பாருவிலிருந்து பினாங்கு மற்றும் சிபு ஆகிய நகரங்களுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here