புதரில் ஏற்பட்ட தீ கார் பட்டறையை பதம்பார்த்தது; 18 கார்கள் எரிந்து சாம்பல்

கோலாலம்பூர்:

ஜோகூர் பாருவில் உள்ள லார்கின், தாமான் புக்கிட் மேவா (Taman Bukit Mewah) பகுதியில் நேற்று ஏற்பட்ட புதர் தீ, அருகில் இருந்த ஒரு கார் பட்டறைக்குள் (Workshop) பரவியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 18 வாகனங்கள் தீக்கிரையாகின.

சுமார் 0.372 ஹெக்டேர் பரப்பளவில் பரவிய புதர் தீ, தாமான் புக்கிட் மேவாவில் உள்ள மஸ்ஜிட் அல் மஹாபா (Masjid Al Mahabah) அருகே அமைந்துள்ள கார் பட்டறைக்குள் பரவியது தொடர்பில், நேற்று மதியம் சுமார் 1.32 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

தீ கட்டுப்பாட்டை மீறி வாகனங்களுக்குப் பரவியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, பல வாகனங்கள் ஏற்கனவே தீயில் எரிந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை 80% எரிந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மதியம் 2.37 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாலை 5.20 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் மொத்த சேத மதிப்பு குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here