மலேசியாவில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு கிராம் 650 ரிங்கிட்டைத் தாண்டியது!

கோலாலம்பூர்:

உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் சந்தை மாற்றங்கள் காரணமாக, தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. மலேசியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 650 ரிங்கிட்டைக் கடந்துள்ளதால், மக்கள் தங்கள் பழைய நகைகளை விற்று பெரும் லாபம் ஈட்டி வருகின்றனர்.

தான் 30 ஆண்டுகளாக வைத்திருந்த ஒரு தங்கக் காப்பை விற்றபோது, அதற்குப் பலனாக 80,000 ரிங்கிட் கிடைத்துள்ளது என்று, கோலா திரெங்கானுவை சேர்ந்த 58 வயதுடைய வோங் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தங்கம் வாங்கியவர்கள், தற்போது அதன் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

பலர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தினசரிச் செலவுகள் மற்றும் வரவிருக்கும் ரமலான் மற்றும் ஈகைத் திருநாள் (Aidilfitri) கொண்டாட்டங்களுக்குத் தேவையான பணத்தைத் திரட்டி வருகின்றனர்.

கோலாலம்பூர் மற்றும் கோத்தா பாரு ஆகிய இடங்களில் உள்ள அடகு மையங்களில் (Ar-Rahnu உட்பட) காலை 9 மணி முதலே மக்கள் கூட்டம் காணப்படுகிறது. பலர் தாங்கள் ஏற்கனவே அடகு வைத்த நகைகளை மீட்டு, தற்போதைய கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் விற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு கிராம் தங்கம் சுமார் 613 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் பழைய தங்கம் கடைகளில் ஒரு கிராம் சுமார் 582 ரிங்கிட் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் (Ounce) 3,355 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய கொள்கை அறிவிப்புகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் 102 டாலராக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here