பிரதோஷ வழிபாட்டு முறை

பிரதோஷம் என்றால் பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழிபாடாகும். அதாவது பிரதி + தோஷம் என்று பிரிக்கப்படுகிறது. பிரதி என்றால் ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்றால் பாபத்தைக் குறிப்பதாகும். பிரதோஷ வழிபாடு செய்வதால் ஒவ்வொருவரும் தங்களுடைய பாவத்தை தொலைத்துக் கொள்ளும் வழி என குறிப்பிடப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் வரும் திரயோதசி திதி எனும் 13ம் நாள் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரக்கூடிய அமிர்தத்தை உண்டால் மரணமில்லா வாழ்க்கை வாழலாம் என மகாவிஷ்ணு கூற தேவர்கள் அமிர்தத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என தயாராகினர்.

ஆனால் அது எளிய வேலை அல்ல என தெரிந்து கொண்டு அசுர்களையும் இதில் பங்கேற்க அழைத்தனர்.தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கடைய ஒத்துழைத்து, பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்திக் கடையத் தொடங்கினர்.

அந்த நேரத்தில் மந்தார மலை மண்ணுக்குள் பதிந்தது. உடனே மகாவிஷ்ணு ஆமையாக அதாவது கூர்ம அவதாரம் எடுத்து, அந்த மத்தை தாங்கினார்.

தொடர்ந்து நீண்ட காலம் பாற்கடலைக் கடைந்ததால் வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது.

அந்த ஆலகால விஷம் உலகில் பரவி மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, சிவபெருமான், அந்த ஆலகால விஷயத்தை உண்டு இந்த அகிலத்தைக் காத்தருளினார். அதன் பின்னரே அமிர்தம் கிடைத்தது.

சிவபெருமான ஆலகால விஷத்தை உண்ட நாள் தான் இந்த திரயோதசி திதி. அது ஒரு சனிக்கிழமை.

இதனால் மாதந்தோறும் இருமுறை வரக்கூடிய திரயோதசி திதியில் பிரதோஷமாக சிவபெருமானை நந்தி மூலமாக வணங்குகிறோம். அதனால் தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம், சனிப் மகா பிரதோஷமாக மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமானின் திருநடனம் :

பிரதோஷத்தன்று சிவபெருமான், தன் வாகனமான நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடனமாடுவதாக ஐதீகம். அதனால் அன்றைய தினம் நந்திக்கு சிறப்பு பூஜை செய்கிறோம்.

பிரதோஷ நேரத்தில் நந்தி வழிபாடு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்வதோடு, நந்தி பகவானுக்கு அறுகம்புல் அல்லது வில்வ இலை மாலையை சாற்றி, நெய் விளக்கேற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வதும் வழக்கம்.

பிரதோஷ நாளன்று யார் ஒருவர் விரதமிருந்து, பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு, நந்தி, சிவபெருமானை தரிசித்து வழிபட்டு, தன் விரதத்தை முடிக்கிறாரோ அவரின் சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேரும்.

இந்திரனுக்கு நிகரான செல்வங்களும், செல்வாக்கும் கிடைக்கும். அன்றைய தினம் சிவபெருமானை வணங்கி தான தர்மங்கள் செய்து வர அளவற்ற பலன்கள் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் திருவடியில் இடம் கிடைக்கும் வகையில் முக்தி கொடுக்கும் வல்லமை உள்ளது என புராணங்கள் கூறுகின்றன.

மற்ற நாட்களில் வரக்கூடிய பிரதோஷ நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதை விட, சனிக்கிழமைகளில் வரக்கூடிய சனி பிரதோஷ விரதம் மேற்கொண்டால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.

அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர் வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும். இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர்.

பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரளய பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும். அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

சனிப் பிரதோஷ நேரத்தி எல்லா தேவர்களும் சிவ பெருமானின் நாட்டியத்ஹ்டை காண வருவார்கள் என்பது ஐதீகம். அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப்பட்டிருக்கும். அதே பிரதோச நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.

பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை வணங்கி சிவனை வணங்கினால் அனைத்து வகை நன்மைகளும் வந்து சேரும் என்பது முன்னோர்களின் வாக்கும். அதிலும் குறிப்பாக சனிப்பிரதோஷம் தினத்தில் நாம் சிவபெருமானை வணங்கினால் சகல பாவங்களும் நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்படும்.

திங்கட் கிழமையில் வரக்கூடிய பிரதோஷத்தைச் சோம வார பிரதோஷம் என்று பெயர். சந்திர பிறையை சூடிய ஈசனுக்கு சோம வார பிரதோஷம் என்று பெயர். இந்த தினத்தில் ஈசனையும், நந்தியையும் வணங்கினால் சிவனின் அருளோடு, சந்திரனின் அருளும் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here