ஈப்போ கல்லுமலை தைப்பூச உற்சவம் முருக பெருமானின் இரதம் கல்லுமலையை வந்தடைந்தது

நாட்டில் பெரிய அளவில் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழா ஈப்போ கல்லுமலை தைப்பூசமும் அடங்கும். அவ்வகையில் நேற்று தைப்பூச முதல் நாள் அன்று விடியற்காலை 6 மணியளவில் ஈப்போ சுங்கை பாரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் இரதத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.15 மணி அளவில் கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தை வந்தடைந்தது.

ஆலய வந்தடைந்த முருக பெருமானை காண ஆலய வளாகத்தில் காலையிருந்து காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ,தமிழ் கடவுளான முருகனை கண்ட பரவசத்தில் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எனும் பக்தர்களின் கோஷம் அனைவரையும் பெய்சிலிர்க வைத்தது.

மேலும் நேற்று காலை தொடங்கி பகதர்கள் முருக பெருமானுக்கு பால் குடம் ஏந்தி வந்து தங்கள் காணிக்கையை செலுத்தினர். அதோடு காவடிகளும் ஏந்தி வந்து பக்தர்கள் தங்கள் தேர்த்திக்கடனை செலுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

எஸ்.லிங்கேஸ்வரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here