ஈப்போவில் பயங்கரம்: எரிவாயு சிலிண்டர் வெடித்து மூதாட்டி படுகாயம்!

ஈப்போ, ஜனவரி 31:

ஈப்போ, தாமான் கிளடாங் ஏமாஸ் (Taman Kledang Emas) பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்றில் இன்று அதிகாலை எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் முதியவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 4.57 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது.

வீட்டில் எரிவாயு கசிவு ஏற்படுவதை உணர்ந்த பாதிக்கப்பட்டவரின் மகள், உடனடியாக தனது தாயையும் (பாதிக்கப்பட்டவர்) சகோதரியையும் எழுப்பி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லியுள்ளார்.

அனைவரும் வெளியேற முயன்றபோது, அந்த மூதாட்டி மட்டும் சமையலறைக்குச் சென்று எரிவாயு சிலிண்டரின் வால்வை (Valve) மூட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக,
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் கூறுகையில்:

பாதிக்கப்பட்டவரின் இரண்டு மகள்களும் காயமின்றி தப்பினர். விபத்து நடந்த நேரத்தில் அவரது கணவர் வீட்டில் இல்லை.

படுகாயமடைந்த பெண் தற்போது ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here