இப்சோஸ் மலேசியா விருது விழா முதல் விருதை வென்றது ஷோப்பி

எந்த நிறுவனம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்ற ஆய்வின் அடிப்படையில் முதல் 10 இடங்களைப் பிடித்த பெரு நிறுவனங்களுக்கு இப்சோஸ் மலேசியா விருது வழங்கி கௌரவித்தது.

இதில் ஷோப்பி நிறுவனம் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற முதல் நிறுவனமாகத் திகழ்கிறது. இணைய பரிவர்த்தனை, பொருள் விநியோகச் சேவை மேற்கொண்டு வரும் ஷோப்பி நிறுவனம் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்), பெட்ரோனாஸ், டச் அண்ட் கோ, மே பேங்க் உட்பட பல நிறுவனங்கள் உள்ளன.

மலேசியாவில் செயல்படும் 160 நிறுவனங்களைப் பட்டியலிட்டு 7,000 பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த நிறுவனங்களுக்கு இப்சோஸ் மலேசியா விருது வழங்கி சிறப்பித்ததாக அதன் ஆலோசகர்களில் ஒருவரான கணேசன் பெரியகருப்பன் தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கை, சேவைத்தரம், பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றை மிகச் சிறப்பாக முன்னெடுத்துவரும் பெரு நிறுவனங்கள் மக்களின் நம்பிக்கையை இன்னும் பெற்று வருகின்றன என்று அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here