பேங்க் ராக்யாட் – ஊடகம் இடையே பிக்கல் பால் விளையாட்டுப் போட்டி

பேங்க் ராக்யாட்டிற்கும் ஊடக செய்தியாளர்களுக்கும் இடையேயான பிக்கல் பால் எனும் விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. தலைநகரில் உள்ள துன் ரசாக் மண்டபத்தில் டி ஹூட் எனுமிடத்தில் இந்த விளையாட்டுப் போட்டி நடந்தேறியது.

பேங்க் ராக்யாட்டிற்கும் ஊடகங்களுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்று பேங்க் ராக்யாட் தொடர்பு வர்த்தகப் பிரிவு தலைமை அதிகாரி தெரிவித்தார்.

சுமார் 64 பேர் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர். ஆஸ்ட்ரோ அவானி அணியைச் சேர்ந்த அனிஃப் மிஸ்வான், ஃப்பதி அஸ்லான் முதல் பரிசான 1,000 ரிங்கிட்டை வென்றனர். டிவி 3வைச் சேர்ந்த ஹஸ்வான் ஹலியாஸ், ஸாருடின் இரண்டாவது பரிசான 800 ரிங்கிட்டை வென்றனர். ஹொட் ஃபம் அணியைச் சேர்ந்த ஜோஹன், ஒஸ்லியான் மூன்றாவது பரிசுத் தொகையை வென்றனர்.

-எஸ்.சண்முகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here