குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 காவல்துறை அதிகாரிகள் தேடப்படுகின்றனர்; கோலாலம்பூர் குற்றப்பிரிவு காவல்துறை அறிவிப்பு

Screenshot

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மாநகர காவல்துறை தலைமையகத்தின் குற்றப்பிரிவுத் துறை (JSJ), பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக 36 போலீஸ்காரர்களை (Wanted Persons) தீவிரமாகத் தேடி வருகிறது. இது குறித்த விபரங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களை அது இன்று வெளியிட்டுள்ளது.

இந்த நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது அவர்களை அடையாளம் காண முடிந்தாலோ, உடனடியாக முன்வந்து தகவல் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் அறிந்தவர்கள் DSP K. ராஜ்குமார்: 03-21460613, பிரிவு D4 JSJ, கோலாலம்பூர் காவல்துறை தலைமையகம்) என்ற அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், அல்லது உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு காவல் நிலையத்திலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் உதவியும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here