சக்தி வாய்ந்த மந்திரங்கள்

மந்திரங்களை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் நம்முடைய உடலிலும், நம்மை சுற்றியும் அதிர்வலைகள் ஏற்பட்டு, அதன் மூலமாக நம்முடைய உடல் மற்றும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகளும் சொல்லுகின்றன. ஒருவரின் மனதை ஒரு முகப்பட வைத்து, அதனால் மனதிற்கு அமைதி ஏற்பட வைக்கின்றன.

தினமும் காலையில் எழுந்து, குளித்து விட்டு, மந்திர ஜபம் செய்வதும், தியானம் செய்வதும் மனநிலைக்கும், உடல்நிலைக்கும் நன்மை தரும் என அறிவியல் ஆய்வுகளும், சாஸ்திர முறைகளும் சொல்லுகின்றன. அப்படி தினமும் காலையில் ஒரே ஒரு முறையாவது பக்தியுடன் சொல்ல வேண்டிய 20 தெய்வீக மந்திரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த 20 மந்திரங்களையும் மொத்தமாகவோ அல்லது உங்களுக்கு விருப்பளமான மந்திரம் அல்லது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை 21, 27, 51, 108 என்ற எண்ணிக்கைகளில் சொல்லி வழிபடலாம். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை ஒரு முறை சொன்னால் கூட அதற்கு நிச்சயம் பலன் ஏற்படும்.

காலை அல்லது மாலை, எந்த நேரம் முடிகிறதோ அந்த நேரத்தில் இந்த மந்திரங்களை சொல்லலாம். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சொல்லுவது இன்னும் அதிகமான பலன்களை தருவதாக சொல்லப்படுகிறது. ருத்ராட்சம், ஸ்படிகம், துளசி மாலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கையில் வைத்துக் கொண்டோ அல்லது கழுத்தில் அணிந்த படியோ இந்த மந்திரங்களை சொல்லலாம்.

தினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் :

1. கணபதி – “ஓம் கணபதியே நமஹ”

2. முருகன் – “ஓம் சரவண பவ”

3. சிவன் – “ஓம் நம சிவாய”

4. விஷ்ணு – “ஓம் நமோ நாராயணா”

5. லட்சுமி – “ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியை நமஹ”

6. சரஸ்வதி – “ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ”

7. துர்கை – “ஓம் தும் துர்காயை நமஹ”

8. மாரியம்மன் – “ஓம் மக்தியே மாரியம்மனே நமஹ”

9. காளி – “ஓம் க்ரீம் காளிகாயை நமஹ”

10. ஆஞ்சநேயர் – “ஓம் ஹனுமதே நமஹ”

11. ஸ்ரீராமர் – “ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்”

12. கிருஷ்ணர் – “ஓம் நமோ வாசுதேவாய”

13. ஸ்ரீராகவேந்திரர் – “ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ”

14. தத்தாத்ரேயர் – “ஓம் ஸ்ரீ தத்தாத்ரேயாய நமஹ”

15. ஐயப்பன் – “ஸ்வாமியே சரணம் ஐயப்பா”

16. சனி பகவான் – “ஓம் சம் சனைச்சராய நமஹ”

17. குரு பகவான் – “ஓம் ப்ரிஹஸ்பதயே நமஹ”

18. சூரியன் – “ஓம் சூர்யாய நமஹ”

19. சந்திரன் – “ஓம் சோம் சோமாய நமஹ”

20. முனீஸ்வரர் – “ஓம் மஹா முனீஸ்வராய நமஹ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here