ஜோகூர் பாரு சிங்கே ஊர்வலம்: மார்ச் 7 முதல் முக்கிய சாலைகள் மூடல்!

ஜோகூர் பாரு | மார்ச் 05, 2026:

புகழ்பெற்ற ஜோகூர் பாரு சிங்கே திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 7 (சனிக்கிழமை) முதல் மார்ச் 10 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வரை நகரின் முக்கிய சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ரவூப் செலாமாட் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (மார்ச் 7) காலை 11:00 – மதியம் 1:00 சாலை தூய்மைப்படுத்தும் சடங்கு ஜாலான் ட்ரஸ் (Jalan Trus), ஜாலான் நீ ஹெங், ஜாலான் வோங் ஆ ஃபூக் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆகிய இடங்கள் மூடப்படும்.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை 11:00 – மதியம் 1:00 தெய்வ சிலைகள் ஊர்வலம் (Xing Gong நோக்கி) ஜாலான் ட்ரஸ், ஜாலான் நீ ஹெங், ஜாலான் துன் அப்துல் ரசாக் மற்றும் ஜாலான் உலு ஆயர் மோலெக் என்பனவும், திங்கட்கிழமை (மார்ச் 9) இரவு 7:00 – அதிகாலை 3:00 (செவ்வாய்) முக்கிய சிங்கே ஊர்வலம் ஜாலான் ஆயர் மோலெக், ஜாலான் யாஹ்யா அவால், ஜாலான் டத்தோ ஓன், ஜாலான் இப்ராகிம் மற்றும் ஜாலான் வோங் ஆ ஃபூக் என்பனவும், செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) காலை 11:00 – மதியம் 1:00 தெய்வங்கள் திரும்புதல் சிங் கோங் ஆலயத்திலிருந்து மீண்டும் ஜாலான் ட்ரஸ்ஸில் உள்ள பழங்கால ஆலயத்திற்குச் செல்லும் பாதைகள் என்பனவும் மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

எனவே வாகன ஓட்டிகளுக்கான மாற்றுப் பாதைகளான சிங்கப்பூர், ஸ்கூடாய் (Skudai) மற்றும் கோத்தா திங்கி ஆகிய இடங்களிலிருந்து வருபவர்கள் நெரிசலைத் தவிர்க்க பின்வரும் பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்: ஜாலான் ஸ்கூடாய் (Jalan Skudai) உள்வட்டச் சாலை (Jalan Lingkaran Dalam) ஜாலான் பந்தாய் லிடோ (Jalan Pantai Lido) EDL நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here