குவாந்தான் | மார்ச் 09, 2026:
பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்கள், இன்று குவந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.
22 வயதான முஹமட் ஷெரீப் சவாஹிட் மற்றும் முஹமட் ஷஃபிக் ஃபர்ஹான் முகமட் நோரிசாம் ஆகிய இருவரும், பணியில் இருந்த போலீஸ் அதிகாரிக்குத் தெரிந்தே காயம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 332-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கடந்த மார்ச் 2-ஆம் தேதி இரவு 9 மணியளவில், ஜாலான் குவாந்தான் – சுங்கை லெம்பிங் சாலையில் உள்ள மஸ்ஜித் தெங்கு அம்புவான் அஃப்சான் சந்திப்பிற்கு எதிரே இச்சம்பவம் நடந்துள்ளது.
மாஜிஸ்திரேட் தெங்கு எலியானா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தலா 7,000 ரிங்கிட் பிணை கோரிய நிலையில், தலா 3,000 ரிங்கிட் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே சம்பவத்தின் போது, முஹம்மது ஷெரீப் என்பவர் அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதற்காக மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிவப்பு விளக்கை மதிக்காமல் சென்றது மற்றும் வளைந்து நெளிந்து (Zig-zag) வாகனம் ஓட்டியது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1). இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 15,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கிற்குத் தனியாக 3,000 ரிங்கிட் பிணை விதிக்கப்பட்டு, விசாரணை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.





















