‘Ops Selamat 26’ சோதனை தொடங்கியது ஜோகூர் போலீஸ்

கோலாலம்பூர்:

ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகையை முன்னிட்டு, ஜோகூரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்க மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை ‘Ops Selamat 26’ அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் 47 இடங்களும் (Hotspots), விபத்துகள் அதிகம் நடக்கும் 38 இடங்களும் (Blackspots) தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

பண்டிகை காலத்தில் ஜோகூர் மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் (BSI) மற்றும் சுல்தான் அபு பக்கர் வளாகம் (KSAB) ஆகிய இரண்டு முக்கிய எல்லை வழித்தடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 2,018 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் நோக்கங்கள்:
1. வீடு புகுந்து திருடப்படுவதைத் தடுத்தல்.
2. சாலை விபத்துகளைக் குறைத்தல்.
3. போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்தல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here