புக்கிட் பிந்தாங் மரச்சாமான்கள் கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 70% சேதம்

கோலாலம்பூர்:புக்கிட் பிந்தாங்கில் இருந்த மூன்று மாடி மரச்சாமான்கள் கடை ஒன்று நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலுமாக அழிந்தது. இரவு 11 மணிக்குச் சற்று முன்பு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. புடு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், ஹாங் துவா மற்றும் துன் ரசாக் குழுக்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மரச்சாமான்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் வணிகம் செய்து வந்த அந்தக் கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 70% சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அத்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதங்களின் அளவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here