‘காந்தாரா’ சர்ச்சை: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராகும் ரன்வீர் சிங் …

கோவாவில் நடைபெற்ற 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘காந்தாரா’ படத்தின் கதாபாத்திரம் போல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மிமிக்ரி செய்து பேசினார். இது கடும் சர்ச்சையை கிளப்பியது. கடவுள் சாமுண்டியை இழிவு செய்வது போல அவரது செயல்பாடு இருந்ததாக புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தனது மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ரன்வீர் சிங் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக ரன்வீர் சிங் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், சாமுண்டி கோவிலுக்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்த மன்னிப்பு மனப்பூர்வமானதாக இல்லை என்றும், தனது மேலாளர் கையாளும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பதிவு வெளியிடப்பட்டதாகவும் புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி தொடருமாறு கர்நாடக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here