சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு; அதிரடிச் சோதனையில் ஒருவர் கைது!

கோலாலம்பூர் | மார்ச் 28, 2026

மிரி, ஜாலான் பாடாங் கெர்பாவ் (Jalan Padang Kerbau) பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை (Gas Cylinders) திருடியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை மிரி மாவட்டப் போலீஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது இந்த நபர் பிடிபட்டார் என்று, மிரி மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமது ஃபர்ஹான் லீ (Mohd Farhan Lee) தெரிவித்துள்ளார்,

ஜாலான் பாடாங் கெர்பாவ் பகுதியில் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டது தொடர்பாகக் கிடைத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சோதனையின் போது சந்தேகத்திற்குரிய நபர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் தண்டனைச் சட்டம் பிரிவு 379-இன் கீழ் (திருட்டு) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் தங்கள் உடைமைகளின் பாதுகாப்பில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தங்களைச் சுற்றி ஏதேனும் சந்தேகத்திற்கிடமான குற்றச் செயல்கள் நடந்தால் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அசிஸ்டண்ட் கமிஷனர் முகமட் ஃபர்ஹான் லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here