ரஷியாவில் காட்டுத்தீ; இதுவரை 21 பேர் பலி

ரஷியா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் ரஷியாவின் குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் தீப்பிடித்தன. இதில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 21 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது. கோடை வெயில் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here