பேராக்கில் 700 திறந்தவெளி தீ விபத்து சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்:

2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பேராக் மாநிலத்தில் சுமார் 700 திறந்தவெளி தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

தீ விபத்துகள் புதர்கள் மற்றும் புல்வெளிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளே அதிக அளவில் பதிவாகியுள்ளன. இதில் 157 குப்பை கிடங்கு தீ விபத்துகளும், 53 புதர் தீ விபத்துகளும், 47 தோட்டம் அல்லது பண்ணை தீ விபத்துகளும் அடங்கும்.

அதே நேரம் உலு பேராக் (Hulu Perak), கிந்தா (Kinta) மற்றும் கோலாகங்சார் (Kuala Kangsar) ஆகிய மாவட்டங்கள் நிலை 1 (எச்சரிக்கை) மட்டத்தில் உள்ளன. இங்கு வெப்பநிலை 35°C முதல் 37°C வரை பதிவாகிறது என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் அல்லது 4 முதல் 12 மணிநேர சமூக சேவை தண்டனை வழங்கும் திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது. இது இன்னும் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) 80% தயார் நிலையில் உள்ளது. சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அவசர கால பணிகளுக்காக பணியில் இருப்பார்கள்.

தற்போது நிலவும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பமான காலநிலையால், தீ வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எந்தச் சூழலிலும் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி குழுத் தலைவர் சாண்ட்ரியா எங் ஷி சிங் (Sandrea Ng Shy Ching) கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here