இது எங்கள் போர் அல்ல: ஈரானுடனான மோதலில் தலையிட ஸ்டார்மர் மறுப்பு …

லண்டன்ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதலால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோகம் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் தன்வசம் வைத்துள்ளது. நட்பு பாராட்டும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என கூறி வருகிறது.

அதனை மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்பட கூடிய நிலை காணப்படுகிறது. இதற்கு ஈரான் அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், ஈரானின் அணு ஆயுத தளங்களை செயலிழக்க செய்ய, அமெரிக்காவுக்கு உதவ முன்வர வேண்டும் என டிரம்ப் வேண்டுகோள் வைத்த நிலையில், இங்கிலாந்து நாடு அதற்கு உடன்பட மறுத்தது. வேறு நாடுகளும் அதற்கு முன்வராத நிலை காணப்பட்டது.

லண்டனில் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரிடம் அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கள் குறித்த கேட்ட போது எங்கள் மீது எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், அது என்ன சத்தமாக இருந்தாலும், நான் இங்கிலாந்தின் தேசிய நலனுக்காகவே முடிவுகளை எடுப்பேன்” என்று ஸ்டார்மர் கூறினார்.

இது எங்கள் போர் அல்ல இதில் நாங்கள் இழுத்து செல்லப்பட மாட்டோம் எனதெரிவித்தார். மேலும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதிக்கு நேட்டோ மிக முக்கியம் என்பதால், அதில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்தார்.

சுமார் 35 நாடுகளின் சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து இராஜதந்திர மற்றும் அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஸ்டார்மர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here