ஈப்போ, தெலுக் இந்தான் அருகே உள்ள லாங்க்காப் நகரில், ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டு போக்குவரத்தை சீர்குலைத்த ஒரு நபரை நேற்று காவல்துறை கைது செய்தது. லாங்காப்–சுய் சாக் சாலையில், நிர்வாணமான முறையில் அநாகரிகமாக நடந்துகொண்டு போக்குவரத்தைத் தடுத்ததாக இரவு 9.35 மணிக்கு ஒரு புகார் வந்ததாக ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் ஏசிபி சுவா கோக் லியான் கூறினார்.
இந்தத் தகவலின் அடிப்படையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில் காணப்படும் 41 வயதுடைய அந்த நபரை காவல்துறை கைது செய்தது “சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக லாங்க்காப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை மற்றும் மனநல மதிப்பீட்டிற்காக தெலுக் இன்டான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்தைப் பாதுகாக்க, இந்தச் சம்பவத்தின் காணொளிகளைப் பகிர வேண்டாம் என்றும் சுவா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.









