போக்குவரத்திற்கு எதிராக வாகனமோட்டியவரை தேடி வரும் போலீசார்

 பழைய கிள்ளான் சாலையில் இன்று காலை சுமார் 500 மீட்டர் தூரம் போக்குவரத்து விதிக்கு எதிராகச் சென்ற காரின் ஓட்டுநரை கோலாலம்பூர் காவல்துறை தேடி வருகிறது. இந்தச் சம்பவம் காலை 9.44 மணிக்கு நடந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சூரி இஸா தெரிவித்தார்.

அந்தக் கார், ஜாலான் கிள்ளான் லாமா/ஜாலான் செபாடு சந்திப்பிலிருந்து ஜாலான் கிள்ளான் லாமா/ஜாலான் கூச்சாய் லாமா சந்திப்பு வரை பயணித்தது காணப்பட்டது. இதுவரை எந்தக் காவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் சம்சுரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபரைத் தேடிப்பிடிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here