எந்த மந்திரமாக இருந்தாலும் அதை பிரம்ம முகூர்த்த வேளையில் சொல்வது சிறப்பு. இது இன்னும் அதிகமான, உயர்ந்த பலன்களை தரும். இது தவிர எந்த தெய்வத்தின் மந்திரங்களை சொல்கிறோமோ அந்த தெய்வத்திற்குரிய முக்கியமான வழிபாட்டு, விரத நாட்கள், கிரகண நேரம், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் சொல்லும் போது விசேஷமான பலன்கள் ஏற்படுகிறது.
லட்சத்து எட்டு முறை சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
1.”ஓம் கன் கணபதயே நமஹ”
2. “ஓம் நமச்சிவாய”
3. “ஓம் சரவண பவ”
4. “ஓம் நமோ நாராயணாய”
5. “ஓம் காளியை நமஹ”
6. “ஓம் நமோ பகவதே ருத்ராய”
7. “ஓம் நமோ பகவதே வாசுதேவாய”
8. “ஓம் நமோ நாராயணி”
9. “ஜெய் ஸ்ரீராம்”
10. “ஓம் துங் துர்க்காயை நமஹ”
மந்திரங்களை உச்சரிக்கும் முறை :
“உரு ஏற திரு ஏறும்” என்பார்கள். அது போல் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை, ஒரே நினைவுடன், ஒரு வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக மன உறுதியுடன் சொல்லும் போது எண்ணம், சொல், செயல் ஆகியவை ஒன்றுபடும் போது, வெறும் வார்த்தைகளாக இருக்கும் மந்திர சொற்களுக்கு தெய்வீக தன்மை ஏற்படுகிறது. அந்த தெய்வீக தன்மை, இறை அருளை ஈர்க்கும் ஆற்றல் கொண்டதாக மாறுகிறது. இதனால் தான் மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில், அதுவும் உச்சபட்ச எண்ணிக்கையில் சொல்லும் போது அதற்கு அதிக பலன் கிடைக்கிறது.




















